சான்றிதழுக்காக உடல் செயலிழந்த கணவனை தோளில் சுமந்து சென்ற மனைவி!

ஏப்ரல் 05, 2018 913

லக்னோ (05 ஏப் 2018): உத்திர பிரதேசத்தில் சான்றிதழ் பெறுவதற்காக உடல் செயலிழந்த தன் கணவரை முதல்வர் அலுவலகத்திற்கு மனைவியே தோளில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேசம் மதுரா அருகே வசிப்பவர் விமலா என்ற பெண். லாரி ஓட்டுநரான அவரது கணவருக்கு திடீரென உடல் உறுப்புகள் செயலிழந்தது.

இதுகுறித்து சான்றிதழ் பெறுவதற்காக பல இடங்களுக்கு அலைந்தார் விமலா. எனினும் பல்வேறு காரணங்கள் கூறி, அவருக்கு சான்றிதழ் அளிக்காமல் அரசு அலுவலர்கள் இழுத்தடித்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் அலுவலகத்திற்கு கணவரை சுமந்தபடி விமலா சென்றுள்ளார்.

இந்த புகைப் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...