மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு என்னாச்சு?

ஏப்ரல் 06, 2018 827

புதுடெல்லி (06 ஏப் 2018): மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த சில தினங்களாக நிதியமைச்சக அலுவலகத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது.

அருண் ஜெட்லி உடல் நலமின்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வீட்டில் இருந்தபடியே அலுவலகக் கோப்புகளை பார்க்கும் அவர் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள பொருளாதாரப் புலிகளின் குழுவுடன் உரையாடவும், “2022ல் உலகப் பொருளதாரம் பற்றி இந்தியாவின் பார்வை” என்ற தலைப்பில் உரையாற்றவும் அவர் அடுத்த வாரம் இங்கிலாந்து பயணிக்கும் திட்டத்தில் இருந்தார். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்பால், அவரது இங்கிலாந்து பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2014ம் ஆண்டு, தனது நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்காக அவர் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போதைய அவரது உடல்நிலையால், உத்திர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதையொட்டி பதவியேற்பிலும் இன்னும் பங்கேற்கவில்லை. இதற்கிடையே விரைவில் மருத்துவமனையில் அனுமதிக்கப் படலாம் என்றும் தேவைப் பட்டால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...