நான் பிற்படுத்தப் பட்டவன் என்பதால் எதிர்க்கிறார்கள்: மோடி!

ஏப்ரல் 07, 2018 527

புதுடெல்லி (07 ஏப் 2018): நான் பிற்படுத்தப் பட்டவன் என்பதால்தான் எதிர் கட்சிகள் எதிர்க்கின்றன. என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பா.ஜ. கட்சி தொடங்கி 38வது ஆண்டு தினத்தையொட்டி பிரதமர் மோடி நேற்று (ஏப்.,6) எம்.பி.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் 'நமோ ஆப்' மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

பா.ஜ.க வுக்குள் பரம்பரை அரசியல், பிரிவினை கிடையாது. இது முழுக்க ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சியாக செயல்படுகிறது. இன்றைய சூழலில் பா.ஜ., வுக்கு பலத்த எதிர்ப்பு உள்ளது. சில நேரங்களில் வன்முறையாகவும் வெடிக்கிறது. எதிர்க்கட்சிகளின் போக்கு, பிற்படுத்தப்பட்ட ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் பிரதமராக உள்ளதை அவர்களால் தாங்க முடியவில்லை என்பதையே காட்டுகிறது.

எதிர்க்கட்சியினர் பா.ஜ., மீது தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர். பா.ஜ., கட்சியில் தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள் இருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. எங்களுக்கு வாய்ப்பு வந்த போது, ஜனாதிபதியாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.
நாம் சுயநலமற்ற நிலையில் அதே நேரம் பொறுமையை கடைப்பிடித்து அமைதியான முறையில் பேச வேண்டும். என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...