ஆம்புலன்ஸ் இல்லாததால் ஆக்ஸிஜன் சிலிண்டரை சுமந்தபடி தாய்க்கு சேவை செய்த மகன்!

April 07, 2018

ஆக்ரா (07 ஏப் 2018): உடல் நலம் குன்றிய தாய்க்கு உதவ ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டதால் சிலிண்டரை மகன் தோளில் சுமந்தபடி தாய்க்கு சேவை செய்த புகைப் படம் ஒன்று வைரலாகி வருகிறது.

உத்திர பிரதேசம் ஆக்ரா மருத்துவ கல்லூரியில், உடல் நலம் குன்றிய மூதாட்டி மூச்சுத் திணறல் காரணமாக அவதிப் பட்டுள்ளார் அவரை அனுமதிக்க வார்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை என கூறப் படுகிறது. மருத்துவ மனையிலிருந்து எந்த உதவியும் இல்லாமல் இருந்த மூதாட்டியின் மகன் அவரது தோளில் ஆக்ஸிஜன் சிலிண்டரை சுமந்தபடி தாய்க்கு ஆக்ஸிஜன் செலுத்திக் கொண்டு அருகே நின்றுள்ளார். இந்த புகைப் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையே இச்சம்பவத்தை மருத்துவமனை வட்டாரங்கள் மறுத்துள்ளன. சற்று நேரம்தான் அவர்கள் காத்திருந்தனர். பிற நோயாளிகளை எடுத்துச் செல்வதில் ஆம்புலன்ஸ் பிசியாக இருந்ததால் சற்று நேரம் தாமதமானது. ஆனால் சிலர் இதனை புகைப் படமாக எடுத்து பரவ விட்டுள்ளனர். என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!