முஸ்லிம் பெண்கள் பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவி பலி!

April 07, 2018

நிஜாமாபாத் (07 ஏப் 2018): தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பெண்கள் அரபி பள்ளி ஒன்றில் வழங்கப் பட்ட உணவை சாப்பிட்டதில் ஒரு மாணவி பலியாகியுள்ளார்.

நிஜாமாபாத் ஜாமியா சைஃபா நிஸ்வான் என்ற பெண்கள் அரபிப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள், கடந்த வியாழனன்று அங்கு வழங்கப் படும் உணவு சாப்பிட்டனர்.

அதில் சிலருக்கு மயக்கம் வாந்தி ஏற்பட்டுள்ளது இதில் சுமையா ஃபிர்தவ்ஸ் என்ற 15 வயது மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 15 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!