நாளை பாரத் பந்த்!

ஏப்ரல் 09, 2018 595

புதுடெல்லி (09 ஏப் 2018): நாளை நடைபெறவுள்ள பாரத் பந்தை ஒட்டி வன்முறை எதுவும் நிகழாமல் இருக்க பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பில் தங்கள் இனத்தவர்களுக்கு உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய போராட்டத்துக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து இந்த பந்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் வகையிலும் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...