சிறுமியின் வயிற்றில் உள்ள கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி!

ஏப்ரல் 09, 2018 689

மும்பை (09 ஏப் 2018): 13 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்துள்ள 24 மாத கருவை கலைக்க மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை அருகேயுள்ள உல்ஹாஸ்நகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஒருவன் கடத்தி வன்புணர்வு செய்துள்ளான். மேலும் கடந்த வருடம் ஜூலை மாதம் 29-ம் தேதி முதல் அந்த சிறுமியை அவனே வைத்துள்ளான். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி அவனை கைது செய்ததோடு சிறுமியையும் மீட்டனர். ஆனால் அந்த சிறுமி 24 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தது தெரிய வந்தது.

இந்நிலையில் சிறுமியின் வயிற்றில் வளரும் குழந்தையை கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்ககோரி அவரது தந்தை மும்பை ஐகோர்ட்டின் உதவியை நாடினார். 20 வாரங்களுக்கும் அதிகமாக வயிற்றுக்குள் வளர்ந்துவிட்ட கருவை கலைப்பது தாயின் உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்பதால் இதுதொடர்பாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த டாக்டர்கள், தற்போதைய நிலையில் குழந்தையை பிரசவிப்பது அந்த சிறுமியின் மனநிலை மற்றும் உடல்நிலைக்கு ஏற்புடையதல்ல. எனவே, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து விடலாம் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவை நாளை அரசு மருத்துவமனையில் கலைப்பதற்கு மும்பை ஐகோர்ட் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...