பாஜக எம்.எல்.ஏவால் வன்புணர்வுக்கு ஆளான பெண்ணின் தந்தை திடீர் மரணம்!

ஏப்ரல் 09, 2018 760

லக்னோ (09 ஏப் 2018): உத்திர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏவால் வன்புணர்வு செய்யப் பட்ட இளம் பெண்ணின் தந்தை சிறை கஸ்டடியில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெறுகிறது. இந்நிலையில் உன்னாவோ மாவட்டத்தின் பங்காரோ தொகுதி எம்.எல்.ஏ. செங்கர், என்பவர் தன்னை வன்புணர்வு செய்து விட்டதாக இளம் பெண் ஒருவர் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதற்கிடையே அந்த பெண்ணின் தந்தையை பாஜகவினர் சிலர் தாக்க முற்பட்டுள்ளனர். ஆனால் போலீசார் பெண்ணின் தந்தை பப்பு சிங்கை ஆயுத வழக்கு ஒன்றில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பப்பு சிங்க்குக்கு நேற்று இரவு வயிற்று வலி ஏற்பட்டதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட பப்பு சிங் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக கூறப் படுகிறது. இவ்விவகாரம் யோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...