இந்திய விமானங்களில் கொசுத் தொல்லை!

ஏப்ரல் 10, 2018 669

லக்னோ (10 ஏப் 2018): இன்டிகோ விமானம் மற்றும் ஜெட் ஏர்வேய்ஸ் விமானங்களில் கொசுத் தொல்லை அதிகம் இருப்பதாக பயணிகள் புகார் அளித்துள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்த சவுரப் ராய் இன்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான லக்னோ-பெங்களூரு விமானத்தில் பயணம் செய்தார். பயணத்தின் போது விமானத்தில் கொசு தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சவுரப் விமான ஊழியர்களிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால் ஊழியர்கள் அவரை மரியாதை இல்லாமல் நடத்தியதாக கூறப்படுகிறது. அவரை விமானத்திலிருந்து இறங்க வைத்தனர். மேலும், மிரட்டல் விடுத்ததாக சவுரப் புகார் அளித்தார்.

இதுகுறித்து பேசிய இன்டிகோ நிறுவனம், 'சவுரப் ஊழியர்களிடம் கோபமாக நடந்துள்ளார். மேலும் மிரட்டல் விடுவது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதால் தான் கீழே இறக்கப்பட்டார் என தெரிவித்தன. இந்நிலையில், இன்டிகோ நிறுவனம் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது எனவும் உறுதி அளித்துள்ளது.

அதே போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திலும் பயணிகள் கொசு தொல்லையால் அவதியுற்றனர். அது குறித்து வீடியோ இணையதளங்களில் வெளியானது. இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...