பேருந்தில் சென்ற முஸ்லிம் இமாம் தாடியை பிடித்து இழுத்து தாக்குதல்!

ஏப்ரல் 10, 2018 1010

புதுடெல்லி (10 ஏப் 2018): டெல்லியில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட முஸ்லிம் இமாம் மீது அடையாளம் தெரியாத இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

டெல்லி பவானா பகுதி அபூபக்கர் மசூதியின் இமாம் மவுலானா முஹம்மது அஃப்தாப் டெல்லியில் இரவு 10 மணிக்கு டெல்லி அரசு பேருந்தில் அவரது வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த பேருந்தில் வேறு சில பயணிகளும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இமாம் அருகே வந்த சிலர் இமாமின் தாடியை பிடித்து இழுத்து தாக்குதல் நட்த்தியுள்ளனர். மேலும் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை உபயோகித்து அதை அவர் கூற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இமாம் அதற்கு மறுக்கவே மேலும் தாக்கியுள்ளனர். ஆனால் பேருந்தில் பயணம் மேற்கொண்ட எவரும் இதுகுறித்து கேள்வி எழுப்பவில்லை. பேருந்து நடத்துனரோ அல்லது ஓட்டுநரோ மவுலானாவுக்கு ஆதரவளிக்கவில்லை.

இதனை அடுத்து இதுகுறித்து மவுலானா முயம்மது அஃப்தாப் போலீசில் புகார் அளித்தார். மேலும் முழு இரவும் மவுலானா போலீஸ் ஸ்டேஷனிலேயே கழிக்க நேர்ந்தது.

இந்தியாவில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் முஸ்லிம்கள் குறி வைத்து தக்கப் படுவதும், இதுபோன்று சர்ச்சை ஸ்லோகன்கள் கூறுமாறு வலியுறுத்தப் படுவதும் தொடர்ந்தாலும் நாட்டின் தலைநகரில் நடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...