தற்கொலை செய்து கொண்ட விவசாயி மோடி மீது பரபரப்பு கடிதம்!

April 11, 2018

புனே (11 ஏப் 2018): மஹாராஷ்டிராவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி தனது தற்கொலைக்கு பிரதமர் மோடியே காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டம் ரஜுர்வாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் பாவோ ராவ் சாயாரே(55). இவர் தனது நிலத்தில் பருத்தி மற்றும் இதர பயிர்களை விளைவித்திருந்தார். பூச்சிக்கடியால் பயிர்கள் நாசமடைந்து கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர் கடன் வாங்கி பயிர் செய்ததால் அதை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார்.

மேலும் இவருக்கு 17, 18, 19 வயதில் 3 மகள்களும் ஆகாஷ் என்ற 14 வயது மகனும் உள்ளனர். அவர்கள் படிப்பு செலவுக்கு பணம் இல்லாமலும், கல்வி கட்டணம் செலுத்த முடியாமலும் கஷ்டப்பட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த சங்கர், வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் தற்கொலைகு முன்பு 6 பக்க கடிதம் ஒன்றை எழுதிவைத்துள்ளார். அதில் தனது சாவுக்கு காரணம் பிரதமர் மோடியே என்று எழுதி வைத்துள்ளார். கடிதத்தை கைபற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!