ஐ.ஏ.எஸ் காதல் ஜோடிகள் டினா அதார் கணவன் மனைவி ஆனார்கள்!

April 11, 2018

புதுடெல்லி (11 ஏப் 2018): ஐ.ஏ.எஸ் காதல் ஜோடிகளான டினா டாபியும் அதார் உல் ஷஃபிக் கானும் கணவன் மனைவி ஆனார்கள்.

ஐ.ஏ.எஸ்., தேர்வில், 2015ல் முதலிடம் பிடித்தவர், டினா டாபி (24), என்ற பெண். இதே ஆண்டு, காஷ்மீரை சேர்ந்த, அதார்ஆமிர்கான் (25) என்பவர், ஐ.ஏ.எஸ்., தேர்வில் இரண்டாம் இடம் பிடித்தார். இருவரும், உத்தரகாண்ட் மாநிலம், முசோரியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., பயிற்சி அகாடமியில், பயிற்சியில் இருந்தபோது காதலிக்க துவங்கினர். இதன்பின், இருவரும், ராஜஸ்தான் மாநிலத்தில் பணியில் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இருவருக்கும், ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் உள்ள நட்சத்திர விடுதியில், இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!