தாஜ்மஹால் கலசம் இடிந்து விழுந்தது!

ஏப்ரல் 12, 2018 774

ஆக்ரா (12 ஏப் 2018): உத்திர பிரதேசம் மதுராவில் பெய்துவரும் கன மழை காரணமாக, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வளாக தூணின் கலசம் இடிந்துவிழுந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி இரவு பெய்த கன மழையால், தாஜ்மஹாலின் தெற்கு நுழைவு வாயிலில் உள்ள உலோகத் தூணின் கலசம் திடீரென இடிந்துவிழுந்தது. இந்தத் தூண், சுமார் 12 மீட்டர் உயரமுடையது. இதனால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுராவில் பெய்த கனமழையால், வீடுகள் இடிந்து இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர். அங்குள்ள விவசாய நிலங்களும் அதிகமாகச் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்துவருவதால், அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...