காஷ்மீரில் கொடூரம் - 8 வயது சிறுமி கூட்டு வன்புணர்ந்து கொலை!

ஏப்ரல் 13, 2018 865

புதுடெல்லி (13 ஏப் 2018) காஷ்மீரில் 8 வயது சிறுமி கூட்டு வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ராஸானா வனப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கைதான 9 பேரில் காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரின் மகன். மற்றும் காவல்துறை உயரதிகாரியின் மகன், கல்லூரி மாணவன் என தெரியவந்தது. இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு கண்டனம் தெரிவித்தும், காஷ்மீரில் வழக்கறிஞர்கள சங்கத்தினர், வர்த்தக அமைப்பினர், மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தை துவக்கினர். இந்நிலையில் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...