சிறுமி ஆசிபா என் மகள் - கமல் உருக்கம்!

ஏப்ரல் 13, 2018 1269

சென்னை (13 ஏப் 2018): காஷ்மீரில் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை செய்யப் பட்ட சிறுமி ஆசிஃபா எனது மகளாக கூட இருக்கலாம் ஏன்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஆசிபா கடந்த ஜனவரி மாதம் மாயமானார். பின்னர், ஒரு வாரம் கழித்து அங்குள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

8 பேர் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆனால், கைதான அதிகாரியை விடுவிக்கக்கோரி இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு ஜம்மு நகரில் தேசியக்கொடியுடன் ஊர்வலம் நடத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கில் கைதான வரை விடுவிக்க வேண்டும் என அம்மாநில பா.ஜ.க மந்திரிகள் இருவர் தற்போது போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து, சிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டும் என #JusticeForAshifa என்ற ஹேஷ்டேக்கில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் உருக்கமான இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில்:-

சிறுமி ஆசிபாவுக்கு நிகழ்ந்துள்ள கொடூரம் உங்களுக்கு புரிய அவள் உங்களது மகளாக இருக்க வேண்டுமா? அவள் என்னுடைய மகளாக இருந்திருக்கலாம். ஒரு மனிதனாக எனக்கு மிகுந்த கோபம் வருகிறது. ஒரு தந்தையாக, ஒரு குடிமகனான ஆசிபாவை பாதுகாக்க தவறிவிட்டேன். என்னை மன்னித்துவிடு குழந்தையே, உனக்கான பாதுகாப்பான நாட்டை நாங்கள் உருவாக்க தவறிவிட்டோம். எதிர்காலத்தில் உன்னைப்போல வேறு யாருக்கும் இந்த கொடூரம் நடந்து விடக்கூடாது என்பதற்காக நான் போராடுவேன். உன்னை நினைவு கூர்கிறோம், உன்னை மறக்கவும் மாட்டோம். என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...