சிறுமி ஆசிஃபாவுக்கு ஆதரவாக வாதாடும் இந்து வழக்கறிஞருக்கு மிரட்டல்!

ஏப்ரல் 13, 2018 1212

புதுடெல்லி (13 ஏப் 2018): காஷ்மீரில் முஸ்லிம் சிறுமி ஆசிஃபா பானு வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட வழக்கில் சிறுமிக்கு ஆதரவாக ஆஜரகும் இந்து வழக்கறிஞருக்கு இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன.

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ராஸானா வனப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆசிஃபா மயக்க மருந்து கொடுக்கப் பட்டு கோவில் ஒன்றில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கைதான 9 பேரில் காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரின் மகன். மற்றும் காவல்துறை உயரதிகாரியின் மகன், கல்லூரி மாணவன் என தெரியவந்தது. இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிறுமி ஆசிஃபாவுக்கு ஆதரவாக ஆஜராகும் இந்து வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜாவாத்துக்கு இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. மேலும் இந்த வழக்கிலிருந்து அவர் விலகிக் கொள்ள வேண்டும் என்று இந்து அமைப்புகள் தொடர் மிரட்டல் விடுத்துள்ளன.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...