இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கின் முக்கிய மனுதாரர் திடீர் மரணம்!

April 13, 2018

ஆலப்புழா (13 ஏப் 2018): இஸ்ரத் ஜஹான் போலி என்ககவுண்டர் வழக்கின் முக்கிய மனுதாரர் கோபிநாதன் பிள்ளை விபத்தில் மரணமடைந்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி மும்பையை சேர்ந்த 19 வயது இஷ்ரத் ஜஹான் மற்றும் ஜாவித் ஷேக், அம்ஜத்அலி அக்பரலி ரானா, ஜீஷான் ஜோஹர் ஆகியோர் மோடியை கொலை செய்ய வந்ததாக கூறி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இது போலி மோதல் தாக்குதல் என்று தெரியவந்தது.

இந்த போலி என்கவுண்டரில் கொல்லப் பட்ட ஜாவித் சேக்கின் (பிரனேஷ் குமார் பிள்ளை) தந்தை கோபிநாதன் பிள்ளை வெள்ளியன்று வாகன விபத்து ஒன்றில் பலியாகியுள்ளார். 78 வயதான பிள்ளை உடல் பரிசோதனைக்காக மருத்துவ மனையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது லாரி ஒன்று அவரது வாகனத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

பிள்ளை மகன் பிரனேஷ் குமார் முஸ்லிமாக மதம் மாறி ஜாவித் சேக் என்று பெயர் மாற்றிக் கொண்டார். இவர் என்கவுண்டரில் கொல்லப் பட்டதை எதிர்த்தும் சேக் நிரபராதி என்றும் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்நிலையில் பிள்ளை மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!