சிறுமி ஆசிஃபா விவகாரம் - மவுனம் கலைந்த மோடி!

ஏப்ரல் 13, 2018 1047

புதுடெல்லி (13 ஏப் 2018): காஷ்மீர் முஸ்லிம் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரம் குறித்து பிரதமர் மோடி தாமதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ராஸானா வனப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கைதான 9 பேரில் காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரின் மகன். மற்றும் காவல்துறை உயரதிகாரியின் மகன், கல்லூரி மாணவன் என தெரியவந்தது. இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார் பிரதமர் மோடி. இந்நிலையில் ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரம் குறித்து இன்று மாலை மோடி மவுனம் கலைந்தார். அவர் இதுகுறித்து பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் எங்கு நடந்தாலும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. அதை நிலை நாட்டத்தான் நான் விரும்புகிறேன். இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...