ஆசிஃபா வன்புணர்வு வெட்கப் பட வேண்டிய ஒன்று - ஐபிஎஸ் அதிகாரி விளாசல்!

ஏப்ரல் 14, 2018 831

புதுடெல்லி (14 ஏப் 2018): சிறுமி ஆசிஃபா கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாகி கொலை செய்யப் பட்ட சம்பவம் வெட்கப் பட வேண்டிய ஒன்று என்று ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பாத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ராஸானா வனப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கைதான 9 பேரில் காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரின் மகன். மற்றும் காவல்துறை உயரதிகாரியின் மகன், கல்லூரி மாணவன் என தெரியவந்தது. இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிஃபாவுக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பாத் அவரது ட்விட்டர் பதிவில் இச்சம்பவம் குறித்து குறிப்பிடுகையில், "ஒரு இஸ்லாமிய குழந்தை கோவிலில் வைத்து வன்புணரப் பட்டு கொலை செய்யப் பட்டுகிறது. அதே சம்பவம் ஒரு இந்து பெண்ணுக்கு ஒரு மசூதியில் வைத்து நடந்திருந்தால் இந்த ஊடகங்களும், இந்துக்களும் எவ்வாறு அவர்களது உணர்வுகளை காட்டி இருப்பார்கள். இந்துவால் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு இந்துவின் பெயரால் நடந்த கொடூரத்திற்கு இந்துக்கள் அமைதி காப்பது வெட்கக் கேடானது." என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...