சிறுமி ஆசிஃபாவுக்கு எதிரான கருத்து - பறிபோன வங்கி ஊழியர் பதவி!

ஏப்ரல் 14, 2018 2342

திருவனந்தபுரம் (14 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டுள்ள நிலையில் அந்த கொலையை நியாயப் படுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கேரள மஹிந்திரா வங்கி ஊழியர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ராஸானா வனப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கோவில் குருக்கள், போலீஸ் அதிகாரி மற்றும் 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் ஒருவர் காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரின் மகன். மற்றும் காவல்துறை உயரதிகாரியின் மகன், கல்லூரி மாணவன் என தெரியவந்தது. இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிறுமியின் கொலை நியாயமானது தான் என்று கீழ்த்தரமான கருத்தை கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு நந்தகுமார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில் "நல்ல வேளையாக இந்தச் சுறிமி 8 வயதிலேயே கொல்லப்பட்டுவ்ட்டார், இல்லையென்றால் இவள் வளர்ந்து இந்தியா மீது வெடிகுண்டு வீசுவார் என்று விஷ்ணு குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவு பரவலாக பகிரப்பட்டதோடு வங்கியின் முகநூல் ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு நந்தகுமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். ட்விட்டரிலும் உங்கள்வங்கிமேலாளரை(#Dismiss_your_manager) பணிநீக்கம் செய்யுங்கள் என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டானது.

இதனை அடுத்து நேற்று மாலை கோடக் மஹிந்திரா வங்கி வெளியிட்ட அறிக்கையில் "விஷ்ணு நந்தகுமாரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை ஏப்ரல் 11, 2018ம் தேதியே பணிநீக்கம் செய்து விட்டோம். எங்கள் வங்கியின் முன்னாள் ஊழியர் இது போன்றதொரு மோசமான கருத்தை பதிவிடுவது எங்களுக்கும் அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. விஷ்ணு நந்தகுமாருக்கு எங்களின் கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறோம் என்றும் வங்கி குறிப்பிட்டுள்ளது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...