தனது குழந்தைக்கு ஆசிஃபா என பெயரிட்ட பத்திரிகையாளர்!

ஏப்ரல் 14, 2018 810

கோழிக்கோடு ( 14 ஏப் 2018): காஷ்மீரில் வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை செய்யப் பட்ட ஆசிஃபாவின் நினைவாக கேரள பத்திரிகையாளர் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு ஆசிஃபா என பெயரிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ராஸானா வனப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கோவில் குருக்கள், போலீஸ் அதிகாரி மற்றும் 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் ஒருவர் காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரின் மகன். மற்றும் காவல்துறை உயரதிகாரியின் மகன், கல்லூரி மாணவன் என தெரியவந்தது. இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரளத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ரஜீத் ராம். இவருக்கு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசனை செய்துக் கொண்டிருந்தார். ஆனால் ஆசிஃபா சம்பவத்தால் ரஜீத் ராம் மனமுடைந்தார். இதையடுத்து மனைவியுடன் கலந்தாலோசனை செய்துவிட்டு மகளுக்கு ஆசிபா என பெயர் சூட்டினார்.

இதையடுத்து ஆசிபா என பெயரிட்டது தொடர்பாக பேஸ்புக்கில் குழந்தையின் புகைப்படத்தை போட்டிருந்தார். இது வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...