அத்வானிக்கு உதவிய ராகுல் காந்தி!

ஏப்ரல் 14, 2018 1481

புதுடெல்லி (14 ஏப் 2018): அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரவணைத்து அழைத்து சென்ற காட்சி பலரையும் ஆச்சரியப் பட வைத்தது.

பாஜக முத்த தலைவர்களில் ஒருவரும் பாஜக இந்த அளவுக்கு வளர்ச்சி அடைய காரணமானவருமான எல்.கே. அத்வானி கடந்த நாடாளு மன்ற தேர்தல் முதல் பாஜக தலைமையால் புறக்கணிக்கப் பட்டு வருகிறார். மேலும் திரிபுராவில் முதல்வர் பிப்லாப் தேவ் பதவியேற்பு விழாவில் கும்பிட்டு வணக்கம் சொன்ன அத்வானியை பிரதமர் நரேந்திர மோடி கண்டும் காணாமல் புறக்கணித்தது தொடர்பான வீடியோ வைரலாகியிருந்தது. ஏற்றி விட்ட ஏணியையே மோடி எட்டி உதைக்கிறார் என்ற விமர்சனமும் பலராலும் முன் வைக்கப் பட்டு வருகின்றன.

இந்நிலையில் அம்பேத்கரின் 128வது பிறந்த நாள் விழாவையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது வயது முதிர்வால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு சிரமப்பட்டு நடந்து வந்த அத்வானியை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அரவணைத்து அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த அழைத்துச் சென்றார். மோடி புறக்கணித்தாலும் ராகுல் காந்தி அத்வானியை அரவணைத்துச் சென்றதை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...