ஆசிஃபாவை தொடர்ந்து இன்னொரு கொடூரம் - 9 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை!

ஏப்ரல் 15, 2018 1073

சூரத் (15 ஏப் 2018): குஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத் சூரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானம் அருகே உடலின் சுமார் 86 இடங்களில் காயங்களுடன் போலீசார் உடலை மீட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை அந்த சிறுமி யார் என்ற அடையாளம் காணப் படவில்லை. காணாமல் போனவர்கள் புகார்களின் அடிப்படையில் உடலை அடையாளம் காணப் படும் முயற்சியில் போலீஸ் இறங்கியுள்ளது. மேலும் குற்றவாளிகளை தேடும் பணியிலும் போலீஸ் முடுக்கி விட்டுள்ளது.

சிறுமி கொடூரமாக வன்புணரப்பட்டு கொலை செய்யப் பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காஷ்மீர் சிறுமி ஆசிஃபா கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டு கொலை செய்யப் பட்ட நிலையில் இன்னொரு சம்பவம் பிரதமர் மோடி மாநிலத்திலேயே நிகழ்ந்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...