ஆசிஃபா வழக்கை மதம் சார்ந்து பார்க்கவில்லை: காவல்துறை அதிகாரி ரமேஷ்குமார்!

ஏப்ரல் 15, 2018 829

ஸ்ரீநகர் (15 ஏப் 2018): ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட வழக்கை நான் மதம் சார்ந்து பார்க்கவில்லை ஒரு போலீஸ் அதிகாரியாக என் பணியை செய்தேன் என்று ஆசிஃபா வழக்கை உலகுக்கு கொண்டு வந்த காவல்துறை அதிகாரி ரமேஷ் குமார் ஜல்லா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பண்டிட் இனத்தை சேர்ந்த 59 வயது ரமேஷ் குமார் ஜல்லா ஸ்ரீநகரில் பிறந்தார். இவர் ஜெனரல் டி.என். ஜல்லாவின் மகன் ஆவார். ஜல்லா பல தடைகளை உடைத்தே ஆசிஃபா வன்புணர்வு வழக்கை வெளியே கொண்டு வந்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "இந்த வழக்கு எங்களுக்கு பெரிய சவாலாகவே இருந்தது. சுமார் 3 மாதங்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது பல தடயங்கள் எங்களுக்கு கிடைக்க வில்லை. குற்றவாளிகள் அதனை அழிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். எனினும் கிடைத்த தடயங்களை வைத்து உண்மை குற்றவாளிகளை பிடித்தோம்.

மேலும் இவ்வழக்கில் எங்கள் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு கடும் நெருக்கடியும், மிரட்டலும் இருந்தது. ஆனால் அது குறித்து நாங்கள் கவலை கொள்ள வில்லை ஆசிஃபா ஒரு முஸ்லிம் என்று பார்க்க வில்லை மேலும் இந்த வழக்கை ஒரு மதம் சார்ந்தும் பார்க்க வில்லை. ஒரு போலீஸ் அதிகாரியாக நேர்மையாக என் பணியை செய்துள்ளேன். எங்களுக்கு வழங்கப் பட்ட கால அளவுக்கு முன்பே இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடித்தது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ." என்று தெரிவித்துள்ளார்.

ஆசிஃபா வழக்கை நேர்மையுடன் எதிர் கொண்ட ரமேஷ் குமார் ஜல்லாவுக்கு சமூக வலைதளங்களில் பாரட்டுக்கள் குவிகின்றன.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...