டெல்லி ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து!

ஏப்ரல் 15, 2018 581

புதுடெல்லி (15 ஏப் 2018): டெல்லி ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லி கலினி குஞ்ச் பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் சுமார் 226 அகதிகள் தங்கியுள்ளனர். அங்கு ஞாயிறன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் திடீரென தீ பற்றியது. இதில் அகதிகள் முகாம் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளதாக கூறப் படுகிறது. எனினும் காயங்கள் குறித்து தகவல் இல்லை.

காலை 06:50 க்கு தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சுமார் 60 ரோஹிங்கிய குடும்பங்கள் அங்கு தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...