இந்திய சீனா உறவில் விரிசல்!

April 15, 2018

நெல்லை (15 ஏப் 2018): இந்தியா-இலங்கை இடையிலான ராஜ்ய உறவுகள் முன்புபோல் இல்லை இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முதல் மந்திரி விக்னேஷ்வரன், நெல்லையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது விக்னேஷ்வரன் கூறியதாவது:- “

இலங்கையில் மாகாணங்களுக்கான அதிகார வரம்பு குறைவாக உள்ளது. இலங்கை தமிழ் மக்களுக்கான முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை மாகாணங்களுக்கான அதிகார வரம்பு குறைவாகவே உள்ளது. அதிகார வரம்பு குறைவால் இலங்கை தமிழ் மக்களுக்கு முன்னேற்றங்களை ஏற்படுத்தவில்லை.

இலங்கை தற்போது சீனாவுடன் வெளிப்படையான நெருக்கம் காட்டுகிறது. சீனாவுடனான நட்பினால், இந்தியா- இலங்கை இடையேயான உறவு முன்பு போல் இணக்கமாக இல்லை” இந்தியா போன்ற வெளிநாடுகளில் அகதிகளாக உள்ளவர்களை மீண்டும் அழைத்துவர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!