ஆசிஃபா விவகாரம் - தேசிய அளவில் வெடித்த போராட்டம்!

ஏப்ரல் 15, 2018 704

புதுடெல்லி (15 ஏப் 2018): காஷ்மீர் கத்துவ ஆசிஃபா மற்றும் உத்திர பிரதேசம் உன்னாவோ பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ராஸானா வனப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கோவில் குருக்கள், போலீஸ் அதிகாரி மற்றும் 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் ஒருவர் காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரின் மகன். மற்றும் காவல்துறை உயரதிகாரியின் மகன், கல்லூரி மாணவன் என தெரியவந்தது. இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டதற்கும் உத்திர பிரதேசம் 17 வயது சிறுமி வன்புணரப் பட்டதற்கும் நீதி கேட்டு ஞாயிறன்று நாடெங்கும் போராட்டம் நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் ஆயிரக் கணக்கானோர் “Not In My Name” என்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் லக்னோ, டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் தொடரும் வன்புணர்வு விவகாரங்களில் ஆளும் பாஜகவினரே ஈடுபட்டிருப்பது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...