கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியில்லை: அசாதுத்தீன் உவைசி!

ஏப்ரல் 16, 2018 630

பெங்களூரு (16 ஏப் 2018): கர்நாடகாவில் போட்டியிடப் போவதில்லை என்று AIMIM தலைவர் அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.

வரும் மே மாதம் 12 ஆம் தேதி கர்நாடக சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக வெற்றி பெற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அங்கு அசாதுத்தீன் உவைசி கட்சி போட்டியிடும் என எதிர் பார்க்கப் பட்டது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் அசாதுத்தீன் உவைசி பாஜகவுக்கு மறைமுக ஆதரவு அளிக்கிறார் என்ற குற்றச்சட்டும் இருந்து வந்த்து.

இந்நிலையில் பாஜக வெற்றி பெற்று விடக் கூடாது என்பதால் கர்நாடகாவில் போட்டியிடப் போவதில்லை என அசாதுத்தீன் உவைசி அறிவித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தில் அசாதுத்தீன் கட்சி போட்டியிட்டதால் முஸ்லிம்கள் வாக்கு பெருமளவில் பிரிந்து பாஜக வெற்றி பெற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார் என்ற குற்றச் சாட்டு அசாதுத்தீன் உவைசி மீது இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...