ஆசிஃபா விவகாரம் - முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோடிக்கு அவசர கடிதம்!

ஏப்ரல் 16, 2018 957

புதுடெல்லி (16 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் சுமார் 50 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ராஸானா வனப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கோவில் குருக்கள், போலீஸ் அதிகாரி மற்றும் 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் ஒருவர் காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரின் மகன். மற்றும் காவல்துறை உயரதிகாரியின் மகன், கல்லூரி மாணவன் என தெரியவந்தது. இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடெங்கும் மத்திய அரசி எதிர்த்து போராட்டம் வெடித்துள்ளன.

இந்நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், சுதந்திரத்திற்கு பின் இருண்ட நேரம் என்று அந்த கடிதத்தின் தலைப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் காஷ்மீர் சிறுமி ஆசிஃபா விவகாரம் மற்றும் உத்திர பிரதேசம் மாநிலம் உன்னவோ சிறுமி பாஜக எம்.எல்.ஏவால் வன்புணர்வு செய்யப் பட்டது உள்ளிட்ட நாட்டில் தலை விரித்தாடும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அந்த முன்னாள் அதிகாரிகள் குரல் கொடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அரசு தயவு தாட்சன்யம் பார்க்காமல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும், இதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அவசர முடிவு எடுக்கப் பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் யார் யாரெல்லாம் இதுபோன்ற குற்றங்களுக்கு உடந்தையாக உள்ளனரோ அவர்கள் அதிகாரத்தில் இருந்தாலும், மத்திய, மாநில அரசில் அங்கம் வகித்தாலும் உடன் அவர்கள் நீக்கப் படுவதோடு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...