சிறுமி ஆசிஃபாவுக்காக வாதாடும் பெண் வழக்கறிஞர் பகீர் தகவல்!

ஏப்ரல் 16, 2018 873

ஜம்மு (16 ஏப் 2018): சிறுமி ஆசிஃபாவுக்கு ஆதரவாக வாதாடும் பெண் வழக்கறிஞர் தீபிகாவுக்கு குற்றவாளிகள் தரப்பில் இருந்து தொடர் மிரட்டல் வருவதாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ராஸானா வனப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கோவில் குருக்கள், போலீஸ் அதிகாரி மற்றும் 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் ஒருவர் காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரின் மகன். மற்றும் காவல்துறை உயரதிகாரியின் மகன், கல்லூரி மாணவன் என தெரியவந்தது. இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடெங்கும் மத்திய அரசி எதிர்த்து போராட்டம் வெடித்துள்ளன.

இந்நிலையில் சிறுமிக்காக வாதாடும் வழக்கறிஞர் தீபிகா, தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதோடு, தானும் பாலியல் பலாத்காரம் செய்யப்படக் கூடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட சிறுமிக்காக வாதாடுவதால், தான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், சமூகப்புறக்கணிப்பு செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் எத்தனை நாட்கள் உயிரோடு இருப்பேன் என தெரியாது. எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. சிலர் என்னை வழக்கில் இருந்து விலகும்படி மிரட்டுகின்றனர். என்னை இவ்வழக்கில் ஆஜராக வேண்டாம் எனவும், அப்படி ஆஜரானால் என்னை மன்னிக்க மாட்டேன் எனவும் சிலர் மிரட்டுகிறார்கள் என தெரிவித்துள்ளார். தனக்கு வரும் மிரட்டல்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...