மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை!

April 16, 2018

ஐதராபாத் (16 ஏப் 2018): ஐதராபாத் மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர்.

ஐதராபாத் புகழ் பெற்ற மக்கா மசூதியி கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர், 50 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட சுவாமி அசீமானந்த் உட்பட அனைவரையும் விடுதலை செய்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக சரியான ஆதாரங்கள் இல்லை என்பதை காரணம் காட்டி குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இவ்வழக்கில் முக்கிய அப்ரூவர் சாட்சியமான சுவாமி அசீமானந்த் வாக்குமூலம் உட்பட முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதாக அறிவிக்கப் பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.  

Search!