மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி திடீர் ராஜினாமா!

ஏப்ரல் 16, 2018 857

புதுடெல்லி (16 ஏப் 2018): மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் ஐந்து பேரை விடுதலை செய்த நீதிபதி ரவீந்திர ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐதராபாத் புகழ் பெற்ற மக்கா மசூதியி கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர், 50 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட சுவாமி அசீமானந்த் உட்படஐந்து பேரஇ விடுதலை செய்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி ரவீந்திர ரெட்டி இன்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் இது அவரது சொந்த காரணமான முடிவு என்று தெரிவித்த சீனியர் நீதிபதி ஒருவர் இதுகுறித்து மேலதிக தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக இவ்வழக்கில் சுவாமி அசீமானந்த் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்கள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போனதாக கூறப் பட்ட நிலையில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் விடுதலையானது பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் தீர்ப்பளித்த சில மணி நேரங்களில் நீதிபதி ரவீந்திர ரெட்டி ராஜினாமா செய்துள்ள விவகாரம் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே நீதிபதி ரவீந்திர ரெட்டியின் ராஜினாமா அதிர்ச்சி அளிப்பதாக (AIMIM) தலைவர் அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...