பாஜகவுக்கு எதிர்ப்பு - பிரவீன் தொகாடியா உண்ணாவிரதம்!

April 17, 2018

புதுடெல்லி (17 ஏப் 2018): விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் புறக்கணிக்கப் பட்டதை அடுத்து அதிலிருந்து விலகியுள்ள பிரவீன் தொகாடியா விரைவில் புதிய அமைப்பு தொடங்கவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விஹெச்பி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் அந்த அமைப்பின் மூத்த தலைவரான பிரவீன் தொகாடியா ஆதரவு பெற்ற வேட்பாளர் ராகவ ரெட்டி தோல்வி அடைந்தார். புதிய தலைவராக விஎஸ். கோக்ஜே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அந்த அமைப்பில் இருந்து விலகிய தொகாடியா, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியையும் மறந்துவிட்டனர் என்றும் பாஜகவை தாக்கிப் பேசினார்.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அகமதாபாத்தில் பிரவீன் தொகாடியா இன்றுமுதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்குகிறார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!