ஆசிஃபா விவகாரத்தை தொடர்ந்து பாஜக அமைச்சர்கள் ராஜினாமா!

ஏப்ரல் 18, 2018 1040

ஜம்மு (18 ஏப் 2018): ஆசிஃபா வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டதை அடுத்து காஷ்மீர் அரசில் அங்கம் வகித்துள்ள அனைத்து பாஜக அமைச்சர்களும் ராஜினாமா செய்ய பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ராஸானா வனப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கோவில் குருக்கள், போலீஸ் அதிகாரி மற்றும் 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் ஒருவர் காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரின் மகன். மற்றும் காவல்துறை உயரதிகாரியின் மகன், கல்லூரி மாணவன் என தெரியவந்தது. இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடெங்கும் மத்திய அரசி எதிர்த்து போராட்டம் வெடித்துள்ளன.

மேலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக காஷ்மீர் பாஜக இரு அமைசர்கள் ஊர்வலம் சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மகபூபா முஃப்தி தலைமையிலான காஷ்மீர் அரசில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு நெருக்கடி அதிகரித்தது. இதனால் சம்பந்தப் பட்ட இரு அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். ஆனாலும் எதிர்கட்சிகள் மேலும் நெருக்கடி கொடுப்பதால் காஷ்மீரில் பாஜக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதனால் காஷ்மீர் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...