உச்ச நீதிமன்ற வரலாற்றில் கருப்பு நாள் - பிரஷாந்த் பூஷன்!n

ஏப்ரல் 19, 2018 798

புதுடெல்லி (19 ஏப் 2018): உச்ச நீதிமன்ற வரலாற்றில் இன்றைய தினம் கருப்பு நாள் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

செராபுதீன் ஷேக், போலி என்கவுன்ட்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டிருந்தார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா. இந்த வழக்கை விசாரித்து வந்தவர் நீதிபதி லோயா. இந்நிலையில் நீதிபதி லோயா திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப் பட்டிருந்தது. மனு தாரர்களில் ஒருவர் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.

இந்நிலையில் இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த
மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், “ உச்ச நீதிமன்ற வரலாற்றில் இன்றைய தினம் கருப்பு நாள். நீதிமன்றத்தின் தீர்ப்பு கடுமையான அதிருப்தியை தந்துள்ளது” என்றார்.

பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப் பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வழக்குகளில் தொடர்புடைய பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சமீப காலமாக அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...