ரோஹிங்கிய அகதிகள் முகாமில் தீ வைத்ததை ஒப்புக் கொண்ட பாஜக ஆதரவாளர்!

ஏப்ரல் 19, 2018 1251

புதுடெல்லி (19 ஏப் 2018): டெல்லி ரோஹிங்கிய அகதிகள் முகாமில் நாங்கள் தான் தீ வைத்தோம் என பஜக இளைஞர் அமைப்புகளில் ஒன்றான பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் தலைவர் மனீஷ் சாந்திலா ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி டெல்லி கலினி குஞ்ச் பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீ பற்றி எரிந்தது. சுமார் 226 அகதிகள் தங்கியுள்ள அந்த முகாமில் அதிகாலை சுமார் 3:30 மணி அளவில் திடீரென தீ பற்றி எரிந்து முகாம் முழுவதும் சாம்பலானது.

இந்நிலையில் இதனை யார் செய்திருப்பார் என்பது குறித்து போலீஸ் விசாரணை செய்து வரும் நிலையில் BJYM (Bharatiya Janata Yuva Morcha) அமைப்பின் தலைவர் மனீஷ் சாந்திலா சமூக வலைதளத்தில் ரோஹிங்கிய முகாமில் தீ வைத்தது நாங்கள்தான் என்று பகிரங்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் அலுவலகத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் மனீஷ் சாந்திலாவின் ட்விட்டை அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...