97 முஸ்லிம்களை கொன்ற கலவர வழக்கிலிருந்து மாயா கோட்னானி விடுதலை!

April 20, 2018

புதுடெல்லி (20 ஏப் 2018): குஜராத் நரோடா பாட்டியா கலவர வழக்கிலிருந்து மாயா கோட்னானி விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

2002 குஜராத்தின் மோசமான கலவரத்தில் ஆமதாபாத் நரோடா பாட்யாவில் 97 முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் நடத்திய இந்த போராட்த்தில் சுமார் 800 வீடுகள் தீக்கு இறையாக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 2012ல் சிறப்பு புலனாய்வு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேருக்கு 28 ஆண்டுகள் ஆயுள் தண்டனைவிதித்து உத்தரவிட்டது.

கலவரத்தை தூண்டியதாகவும் அதற்கு மூளையாக செயல்பட்டதாகவும் மாயா கோட்னானி குற்றம்சாட்டப்பட்டார். இந்நிலையில் குஜராத் ஹைகோர்ட் மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 29 பேரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது, போதுமான ஆதாரங்கள் சமர்பிக்கப்படாததை காரணமாக காட்டி அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

Search!