மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிக்கை!

ஏப்ரல் 20, 2018 733

ஐதராபாத் (20 ஏப் 2018): மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஐதராபாத் புகழ் பெற்ற மக்கா மசூதியி கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர், 50 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட சுவாமி அசீமானந்த் உட்பட அனைவரையும் விடுதலை செய்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுவாமி அசீமானந்த் ஏற்கனவே அப்ரூவராக மாறி இந்த வழக்கில் சாட்சியம் அளித்திருந்த நிலையில் அனைவரும் விடுதலை செய்யப் பட்டுள்ளது சர்ச்சையானது.

இந்நிலையில் AIMIM தலைவர் அசாதுத்தீன் உவைசி தலைமையிலான குழு தெலுங்கானா ஆளுநர் E.S.L. நரசிம்மனை சந்தித்து 9 பக்க கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளனர். அதில் மக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பான ஆவணங்கள் அடங்கும். மேலும் மக்கா மசூதி குண்டு வெடிப்பு குறித்து மீண்டும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...