முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் மறைவு!

ஏப்ரல் 20, 2018 692

புதுடெல்லி (20 ஏப் 2018): முன்னாள் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் (94) காலமானார்.

1924-ம் ஆண்டு லாகூர் நகரில் பிறந்த ராஜிந்தர் சச்சார் டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றி 1985-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் முஸ்லிம்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சச்சார் தலைமையில் 2005-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் குழு அமைத்திருந்தார்.

2006-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சச்சார் குழு அறிக்கையில் இந்திய முஸ்லிம்கள் சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த பரிந்துரைகள் எதுவும் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், உடல்நிலை குறைவால் டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சச்சார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...