சிறுமிகள் தொடர் வன்புணர்வு - மோடி அரசுக்கு நெருக்கடி!

ஏப்ரல் 21, 2018 778

புதுடெல்லி (21 ஏப் 2018): இந்தியாவில் சிறுமிகள் வன்புணர்ந்து படுகொலை செய்யப் படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

காஷ்மீர் கத்துவாவில் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட சம்பவம் மற்று உ.பியில் உன்னவோ சம்பவத்தை தொடர்து நாடெங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை உருவாகியுள்ளது. மேலும் இவ்விவகாரம் சர்வதேச அளவில் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் லண்டன் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கேயும் எதிர்ப்பு ஏற்பட்டது. மேலும் சர்வதேச நாணய நிதிய தலைவர் கிறிஸ்டைனும், பெண்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மோடியை வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் அரசுக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடியை சமாளிக்க வெளிநாட்டில் இருந்து திரும்பி கையோடு அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மோடி தலைமையில் இன்று (ஏப்.,21) மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மத்திய அமைச்சர் மேனகா ஏற்கனவே வீடியோ மூலம் வெளியிட்டுள்ள செய்தியில், சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...