பாஜக விலிருந்து விலகினார் யஸ்வந்த் சின்ஹா!

ஏப்ரல் 21, 2018 581

பாட்னா (21 ஏப் 2018): தற்போதைய பாஜக தலைமையிலான ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹா பாஜகவிலிருந்து விலகினார்.

முன்னால் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா. கடந்த 2014-ம் ஆண்டில் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததிலிருந்து, கட்சியின் நடவடிக்கைகளில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார். மேலும் மூத்த தலைவர்களின் கருத்துகளைக் கட்சியினர் நிராகரிக்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளைப் பகிரங்கமாக முன்வைத்தார். சமீபத்தில், நாட்டின் சூழல் மிகவும் இருண்டுள்ளது என்று கூறி கடிதம் ஒன்றை மோடிக்கு எழுதினார்.

இந்த நிலையில், இன்று பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பேசிய அவர் 'அரசியல் வாழ்க்கையில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் இனி சேரப்போவது இல்லை. நான் எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை, எந்தப் பதவியும் எனக்கு வேண்டாம். இன்றுமுதல் பா.ஜ.க-வில் நான் இல்லை. அக்கட்சியின் தொடர்பைத் துண்டிக்கிறேன்' எனக் கூறி பா.ஜ.க-வில் இருந்து விலகினார்.

90ல் பா.ஜ.க-வில் இணைந்து, தனது அரசியல் பயணத்தை தொடங்கிய வளர்ச்சியில் பாஜக வாளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...