மீண்டும் ஒரு கொடூரம் - 8 மாத குழந்தை வன்புணர்ந்து படுகொலை!

ஏப்ரல் 22, 2018 722

இந்தூர் (22 ஏப் 2018): மத்திய பிரதேசத்தில் 8 மாத குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சாலையில் பலூன் விற்றுப் பிழைக்கும் ஏழை ஒருவர் தனது மனைவி மற்றும் 8 மாத குழந்தையுடன் சாலையின் ஓரத்தில் உறங்கிக் கொண்டு இருந்தபோது, சுனில் என்பவன் குழந்தையை தூக்கிச் சென்று சுமார் 500 மீட்டர் தொலைவில் மறைவான இடத்தில் வைத்து குழந்தையை வன்புணர்வு செய்துவிட்டு கொலை செய்துள்ளான்.

மறுநாள் காலை அருகில் உறங்கிக் கொன்டிருந்த குழந்தையை காணவில்லை என்று பெற்றோர் தேடியபோது சற்று தூரத்தில் குழந்தை காயங்களுடன் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்ற பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சகுற்றவாளி குழந்தையை தூக்கிச் சென்று வன்புணர்வு செய்தது தெரிய வந்துள்ளது. சிசிடிவி மூலம் இதனை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து சுனில் கைது செய்யப் பட்டுள்ளான். மேலும் போலீசார் சுனிலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...