காஷ்மீர் சிறுமி ஆசிஃபா பெற்றோருடன் முஸ்லிம் லீக் தலைவர்கள் சந்திப்பு!

ஏப்ரல் 22, 2018 700

ஜம்மு (22 ஏப் 2018): காஷ்மீரில் வன்புணர்வு செய்யப் பட்டு படுகொலை செய்யப் பட்ட ஆசிஃபாவின் பெற்றோரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் இ.டி. முஹம்மத் பஷீர் அவர்களின் தலைமையிலான குழு, சிறுமி ஆசிஃபாவின் பெற்றோரையும் உறவினர்களையும் நேற்று (17.4.18) நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது. மேலும் அந்த ஏழைப் பெற்றோரின் வாழ்வாதாரத்துக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட முஸ்லிம் லீக், சட்டரீதியாக ஏற்படும் செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

இந்நிலையில் முஸ்லிம் லீக் தலைவர்களின் பேச்சு மனதுக்கு ஆறுதல் அளித்ததாக ஆசிஃபாவின் பெற்றோர் தெரிவித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...