காஷ்மீர் சிறுமி விவகாரம் - சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு முற்றுப்புள்ளி!

ஏப்ரல் 22, 2018 808

ஜம்மு (22 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் படவில்லை என்று சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்களுக்கு போலீஸ் முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ராஸானா வனப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கோவில் குருக்கள், போலீஸ் அதிகாரி மற்றும் 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் ஒருவர் காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரின் மகன். மற்றும் காவல்துறை உயரதிகாரியின் மகனும் இதில் தொடர்புடையவராவார். இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்விவகாரம் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் ஆசிஃபா வன்புணர்வு செய்து கொல்லப் படவில்லை என்பதாக சமூக வலைதளங்களில் இந்துத்வவாதிகள் பொய்யான தகவல்களை பரப்பி இவ்விவகாரத்தை திசை திருப்ப முயல்கின்றனர். மேலும் குற்றவாளிகளை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளையும் இந்துத்வ வாதிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் சமூக வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என காஷ்மீர் போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவ அறிக்கைகள் ஆசிஃபா பலமுறை வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார் என தெளிவாகவே கூறுகின்றன. மேலும் காவல்துறை அளித்துள்ள 15 பக்க குற்றவியல் அறிக்கையில் ஆசிஃபா ஜனவரி 10 ஆம் தேதி கடத்தப் பட்டு கூட்டு ஒரு வார காலம் மயக்க மருந்து கொடுக்கப் பட்டு வன்புணர்வு செய்யப் பட்டு இறுதியில் கொடூரமாக கொலை செய்யப் பட்டுள்ளார் என்று தெளிவாக கூறியுள்ளது. 

 

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...