கத்துவா சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்!

ஏப்ரல் 22, 2018 626

புதுடெல்லி (22 ஏப் 2018): நாட்டில் நடைபெறும் வன்புணர்வு படுகொலை சம்பவங்கள் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்து 637 முன்னணி கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

காஷ்மீர் கத்துவா சிறுமி வன்புணர்வு படுகொலை, உபி உன்னாவோ வன்புணர்வு உள்ளிட்ட சம்பவங்களில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கும் நிலையில் மோடியை கண்டித்து கல்வியாளர்கள் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

அதில்,"நாட்டில் சிறுபான்மையினர், தலித் மற்றும் பழங்குடியினர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கதையாகி வருகிறது. இவற்றை தடுக்க நீங்கள் (பிரதமர் மோடி) போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள கடும் கோபம் மற்றும் வேதனையை வெளிப்படுத்துவதற்காகவே இந்த கடிதம்.

காஷ்மீர் சிறுமி வன்கொடுமை செய்து கொடூர கொலை, உத்திரபிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வால் சிறுமி பலாத்காரம் போன்ற சம்பவங்களில்மவுனம் கலைத்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற உறுதியை கூட நீங்கள் அழுத்தமாக கூறவில்லை. பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவது மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகே இது போன்ற தாக்குதல்கள் தொடர் கதையாகி வருகிறது." என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே ஒய்வு பெற்ற உயர் அதிகாரிகள் 50 பேர் மோடியின் மவுனத்தை கண்டித்து ஏற்கனவே கடிதம் எழுதிய நிலையில் 600 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது பிரதமருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...