மோடியின் அறிவுரையை கேட்க மறுக்கும் பாஜகவினர்!

April 23, 2018

புதுடெல்லி (23 ஏப் 2018): எது பேசினாலும் வரம்பு மீறி பேச வேண்டாம் என பாஜகவினருக்கு மோடி அறிவுரை வழங்கியுள்ள போதிலும் அதனை பாஜகவினர் கேட்பதாக இல்லை.

அண்மைக்காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் காஷ்மீர் சிறுமி மற்றும் உன்னாவ் பெண் விவகாரங்கள், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால் இவ்விவகாரங்களில் அதிக தொடர்பு உடையவர்கள் பாஜகவினர் என்பது அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நமோ ஆப் வீடியோ கான்ஃப்ரன்சிங் வாயிலாக உரையாற்றிய நரேந்திர மோடி, பாஜக நிர்வாகிகளுக்கு பொது விசயங்களை பேசும் போது கவனம் தேவை என உத்தரவிட்டார். நாம் தொடர்ந்து தவறுகள் செய்வதன் மூலம் ஊடகங்களுக்கு தீனி போட்டு வருகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது. எனவே இதுபோன்ற அர்த்தமற்ற கருத்துக்கைள கூறுவதையும், ஆர்வக்கோளாறில் கருத்துக்களை தெரிவிப்பதையும் நாம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடகங்கள் அவர்களது பணியை செய்யட்டும் என மோடி கூறினார்.

இதே வேளை பாஜகவினரின் வரம்பு மீறிய பேச்சுகளை கட்டுப்படுத்த சில மாதங்களுக்கு முன்பும் இதேபோன்ற உத்தரவை மோடி பிறப்பித்தார் எனினும் பாஜகவினர் மோடியின் அறிவுரையை செவி சாய்காது தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!