மீண்டும் கொடூரம் - 13 வயது சிறுமி கோவிலில் வைத்து கூட்டு வன்புணர்வு!

ஏப்ரல் 23, 2018 1278

புதுடெல்லி (23 ஏப் 2018): ஹரியானா மாநிலத்தில் 13 வயது சிறுமி கோவிலில் வைத்து வன்புணர்வு செய்யப்பட்டுளார். மேலும் கொடூரமாக தாக்கப் பட்டுள்ளார்.

ஹரியானா யமுனா நகரில் வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியை நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று அருகில் உள்ள கோவிலில் வைத்து கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் தப்பியோட நினைத்த சிறுமியை சுவற்றில் வைத்து தலையை கொடூரமாக தாக்கியுள்ளனர். படுகாயத்துடன் மீட்கப் பட்ட சிறுமி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மேலும் மருத்துவ பரிசோதனைகள் அவர் கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டதை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் வன்புணர்வு செய்த பயங்கரவாதிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காஷ்மீர் சிறுமி தொடங்கி சமீபத்தில் வன்புணர்வு தாக்குதல் படுகொலை என பெரும்பாலானவை கோவில்களில் வைத்து நடத்தப் படுவது பொது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...