இன்னொரு பேரதிர்ச்சி - 8 வயது சிறுமி வன்புணர்வு!

ஏப்ரல் 23, 2018 881

லக்னோ (23 ஏப் 2018): நாட்டின் இன்னொரு அதிர்ச்சியாக 8 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 14 வயது சிறுவன் கைது செய்யப் பட்டுள்ளான்.

நாட்டில் வன்புணர்வு படுகொலை தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் 8 வயது சிறுமியை வன்புணர்வு செய்ததாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 14 வயது சிறுவன் கைது செய்யப் பட்டுள்ளான்.

உத்திர பிரதேசம் கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமி அழுததை வைத்து உடம்புக்கு எதுவும் இருக்கலாம் என மருத்துவரிடம் பெற்றோர் அழைத்துச் சென்ற நிலையில் மருத்துவர் சிறுமி வன்புணர்வு செய்யப் பட்டதை உறுதி செய்ததாக சிறுமியின் தந்தை அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளான். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...