புது மணப் பெண் கணவர் மற்றும் நண்பர்களால் வன்புணர்வு!

ஏப்ரல் 24, 2018 850

கவுஹாத்தி (24 ஏப் 2018): அஸ்ஸாமில் புது மணப் பெண் கணவர் மற்றும் நண்பர்களால் வன்புணர்வு செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு அஸ்ஸாமில் திருமணம் ஆன மூன்றே தினங்களில் பெண் வீடார் சொன்னபடி வரதட்சனை தரவில்லை என்பதால் கணவர் மற்றும் நண்பர்களால் புது மணப்பெண் வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

மேலும் உயிருக்கு ஆபதான நிலையில் அந்த பெண் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அஸ்ஸாமில் இப்பகுதியில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 20 வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிகிறது.

ஒருபுறம் கவுதா, உன்னாவோ போன்று சிறுமிகள் வன்புணர்வு செய்யப்படுவதும், அதேபோல இளம் பெண்கள் வன்புணர்வு செய்யப் படுவதும் நாட்டில் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...