சூரத்தில் வன்புணர்ந்து கொல்லப் பட்ட சிறுமியின் தாயும் படுகொலை!

ஏப்ரல் 24, 2018 651

சூரத் (24 ஏப் 2018): உத்திர பிரதேசம் சூரத்தில் வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட 11 வயது சிறுமியின் தாயும் படுகொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 11 வயது சிறுமி வன்புணர்ந்து படு கோரமாக சிதைக்கப் பட்டு கொல்லப்பட்டார். சூரத்தில் பெஸ்டன் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானம் அருகே முட்புதருக்குள் அந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப் பட்டது.

இந்த நிலையில் சிறுமியை வன்புணர்ந்து கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹர்ஷாயி குர்ஜார் (வயது 25) என்பவனை போலீசார் கைது செய்தனர். அவன் ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் பகுதியைச் சேர்ந்தவன். மேலும் அவனது சகோதரர் ஹரீஷ், நரேஷ், அமரிஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வன்புணர்ந்து கொன்ற சிறுமியையும், அவரது விதவை தாயையும் ரூ.35 ஆயிரம் கொடுத்து ஹர்ஷாயி ஒருவரிடம் வாங்கி இருந்தது தெரிய வந்தது. இந்த இருவரையும் ஹர்ஷாய் ரூ.35 ஆயிரத்துக்கு வாங்கி ராஜஸ்தானில் இருந்து சூரத்துக்கு அடிமை தொழிலாளிகளாக கொண்டு வந்துள்ளான். மேலும் தாயையும் அவன் பலமுறை வன்புணர்ந்துள்ளான். பின்னர் 11 வயது சிறுமியை கற்பழித்து கொன்றதாக போலீஸ் தெரிவித்தது.

இப்படியிருக்க சிறுமியின் தாயும் தற்போது படுகொலை செய்யப் பட்டுள்ளார். சிறுமியின் தாயை ஹர்ஷாயி பல நாட்கள் தன் கையில் வைத்திர்ந்த நிலையில் தற்போது தாயும் படுகொலை செய்யப் பட்டிருப்பது இவ்விவகாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து போலீஸ் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...